மீண்டும் அதிரடியில் சிம்பு வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் விறுவிறுப்பான டீசர்.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் இவர் சிறுவயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள் அந்த வகையில் சிலம்பரசனும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

மேலும் சிம்பு என்றாலே வம்பு என்று அறிந்த பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கூறிவந்தார்கள் அதற்கு காரணம் சிம்பு சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும்.  படப்பிடிப்பை உரிய நேரத்திற்கு முடித்து தரவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் சிம்பு மீது இருந்தது ஆனால் தற்போது சிம்பு தானுண்டு தன் வேலையுண்டு என படங்களில் நடிப்பதில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

சிம்பு மீண்டும் சினிமாவில் முழு ஆதிக்கத்தை செலுத்துவது ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.முதலில் உடல் எடை அதிகரிப்பால் நடனம் ஆட முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தார். ஆனால் தற்பொழுது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து மீண்டும் பழைய சிலம்பரசன் ஆக ஒரு மாறியுள்ளார் இதனை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியாகிய மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கியிருந்தார் இதனை தொடர்ந்து அடுத்ததாக 10 தல வெந்து தனிந்தது காடு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த வெந்து தனிந்தது காடு என்ற திரைப்படத்தை கௌதம் மேனன்தான் இயக்கியுள்ளார் இதற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மேலும் ராதிகா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அப்படியிருக்கும் நிலையில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.