தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தா.
ர் ஐசிரி கணேஷ் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரித்து இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் படம் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, kayadu lohar.
மற்றும் siddhi idnani மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு 18 வயது கிராமத்து பையன் மும்பைக்கு போய் எப்படி மிகப்பெரிய டானாக மாறுகிறான் என்பதே படத்தின் முழு கதை இந்த படத்தில் பெரிய அளவு மாஸ் காட்சிகள் இல்லையென்றாலும் படம் கிளாஸ்ஸாக இருப்பதால்..
ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஆரம்பத்திலேயே பெற்றுள்ளது. அதன் காரணமாக வசூலும் நன்றாகவே அள்ளி வருகிறது சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல் நாளில் உலக அளவில் 15 கோடிக்கு மேல அள்ளிய இந்த திரைப்படம் இரண்டாவது நாளில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த படம் இரண்டு நாள் முடிவில் மொத்தமாக சுமார் 25 கோடி வரை வசூலித்திற்கும் என சொல்லப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் படக்குழு தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் சிம்புவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்.