“வெந்து தணிந்தது காடு” படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த சிம்பு – மேக்கிங் வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக திரை உலகில் ஜொலித்தார். ஆரம்பத்தில் நல்ல நல்ல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் நடித்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக மாறின..  அதன் பிறகு இவர் அதிகமாக படங்களில் கமிட்டாகவில்லை அப்படியே கமிட்டானாலும் அந்த படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தார்.

மேலும் தனது உடல் எடையை ஏற்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். இதனால் அவருக்கான சினிமா வாய்ப்பு குறைந்தது மேலும் ரசிகர்களும் அவருடைய சினிமா பயணம் முடிந்தது என கூறிவிட்டனர். இவருக்கு பின்னால் இருந்து வந்தவர்கள் எல்லாம் உச்ச நட்சத்திரமாக மாறினார் இதனால் இப்படி பேசப்பட்டது ஆனால் சிம்பு மீண்டும் கம்பேக் கொடுக்கும்..

வகையில் உடல் எடையை அதிரடியாக குறைத்து விட்ட இடத்தை பிடிக்க நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக நடித்த மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் உடன் கைகோர்த்து சிம்பு நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்குகிறது இந்த படமும் ஒரு வெற்றி படமாக மாறும் என தெரிய வருகிறது.

அண்மைக்காலமாக சிம்புவை நோட் பண்ணி பார்த்தால் அவருடைய பஞ்ச் டயலாக் இல்லை மற்றும் உடல் அமைப்பு அனைத்துமே மாறி உள்ளது மேலும் நடிகர் சிம்பு தற்போது கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சூப்பராக கொடுத்து வருகிறார். இப்பவும், இனி அவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதோடு அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக நடித்து மிரட்டினார் இந்த படத்திற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு இருந்தார் என பலரும் கூறினர் தற்பொழுது அதன் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக சிம்பு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்காரு.. மனுஷன் வேற லெவல் எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..