பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோலாகலமாக கமலஹாசன் தொடங்கி வைத்த நிலையில் இடையில் சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகின்றன. இந்த இறுதி வாரத்தில் ஜூலி, பாலாஜி முருகதாஸ், அபிராமி, ரம்யா பாண்டியன், நிரூப் மற்றும் தாமரைச்செல்வி ஆகிய ஆறு போட்டியாளர்கள் இருந்தனர்.
மேலும் பிக் பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், பிரியங்கா, பாவணி, அபிநய், சுருதி போன்ற பல போட்டியாளர்களும் தற்போது பைனலிஸ்ட்களுடன் இணைந்துள்ளனர். பைனன்ஸ் போட்டியாளர்களில் முதல் போட்டியாளராக அபிராமி வெளியேறிவிட்டார் அவரை தொடர்ந்து இரண்டாவது ஜூலியும்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை அடுத்து மீதி இருக்கும் நான்கு பைனல் லிஸ்ட்களில் யார் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது இந்த வாரம் தெரிந்து விடும். இதையடுத்து பைனல் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குழு சர்ப்ரைஸாக ஹன்சிகாவை இந்த நிகழ்ச்சி வரவழைக்க உள்ளது. சினிமா உலகில் பிரபல நடிகையான ஹன்சிகா பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும்..
சமீபகாலமாக வெளிவந்த இவரது படங்கள் பெரிது ரீச் ஆகவில்லை. தற்போது ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் வருகின்ற 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹன்சிகா இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ளார். இந்த படம் ஹன்சிகா கேரியரில் முக்கிய ஒரு முக்கிய திரைப்படமாகும்.