நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோவாக தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகர் சிம்பு சினிமா உலகில் ஹீரோவாக மட்டும் பயணிக்காமல் இயக்குனராகவும், பாடகராகவும் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகர் சிம்பு மார்க்கெட் கீழே இறங்கி உள்ளது அதை நிமிர்த்துவதற்காக தொடர்ந்த ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது.
அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். முதலாவதாக வெந்து தணிந்தது காடு படம் வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்திற்காகவே நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து ரொம்ப மெனக்கட்டு நடித்திருக்கிறார்.
கௌதம் மேனன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு சூப்பராக இசையமைத்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது சிம்பு வல்லவன் திரைப்படத்தை இயக்கிய நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து தற்போது சிம்பு ஒரு ரொமாண்டிக் கதையை எழுதி வைத்திருக்கிறாராம்.
அந்த கதையை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது அந்த படத்தில் இளம் நடிகர்கள் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம் சிம்பு ஒரு முக்கிய ரோலில் அதே படத்தில் வந்து போவார் எனவும் சிம்பு தரப்பிலிருந்து கூறப்படுகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே என்பது தெரிய வரும்.