சுதா கொங்கரா படத்தில் இணைய இருக்கும் சிம்பு.? வாங்கயுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

simbu-an-kongra
simbu-an-kongra

நடிகர் சிம்புவின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார் மேலும் தனது எனவே நடிப்பு திறமையையும் சற்று மாற்றிக் கொண்டுள்ளார்.

முன்பு எல்லாம்படங்களில் அதிகம் வசனங்களை  பேசி வந்தவர் எல்லாம் குறைத்துக்கொண்டு படத்தின் கதைக்கு  என்ன தேவையோ அதை மட்டும் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.m இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக  பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.

இது இப்படியிருக்க என்ற நிலையில் சிம்புக்கு நெருங்கிய நண்பரான சுதா கொங்கரா சொன்னா ஒரு புதிய கதை சிம்புவுக்கு பிடித்து போக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது கடைசியாக சிம்புவை வைத்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்த படம் தோல்வியை தழுவ பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு லைகா நிறுவனத்தின் படத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு 25 கோடியை சம்பளமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.