நடிகர் சிம்பு ஆரம்பத்தில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படங்களை கொடுத்ததால் இவர் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்தார் ஆனால் சினிமாவை எப்படி எடுத்துச் செல்கிறோம் என்ற பாதையை சரியாக பயன்படுத்த தவறியதால் ஒரு கட்டத்தில் இவர் படவாய்ப்பு இழந்ததார்.
மேலும் ஒரு சமயத்தில் ஆள் அட்ரஸை தெரியாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற இளம் நடிகர்கள் இவரை முந்தி விட அதைப் பல வருடங்கள் கழித்து சிம்புவும் சுதாரித்துக்கொண்ட பிறகு தற்போது உடல் உடல் எடையை குறைத்தோடு மட்டுமில்லாமல் தனது எண்ணங்களையும் முற்றிலுமாக மாற்றி கொண்டு தற்போது சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுக்க சிறந்த இயக்குனர்களை தன்வசப்படுத்தி உள்ளார்.
இவர் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து மாநாடு, பத்து தல போன்ற அடுத்தடுத்த படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. சிம்பு இப்படி ஓடிகொண்டு இருந்தாலும் சினிமாவைத் தாண்டி பிரபலங்களுடன் மிக ஜாலியாகவும் அதேசமயம் நெருங்கிய நட்புடனும் சிம்பு இருப்பது அவருக்கு ப்ளஸ் ஆக இருக்கிறது அப்படி பல பிரபலங்களுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகியதை நாம் பார்த்து உள்ளோம் அதில் பெரும்பாலாக சிம்பு நயன்தாரா, திரிஷா, தனுஷ் போன்றோருடன் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் மற்றும் இரவு பார்ட்டிகள் எடுத்த புகைப்படங்கள் பல வெளியாகி நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் அனிருத் சிம்பு உடன் ஆரம்ப காலகட்டத்தில் இரவு நேரத்தில் பைக்கில் உலா வந்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் இவர்களுடன் சேர்ந்து ஆர்யாவின் தம்பியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்.