தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தனது சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்கள்.
இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது அதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் வெளியாகி நல்லவர்கள் பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற மல்லிகைப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாடல் யூடியூபில் பல மில்லியன் கடந்து உள்ளது அதனை தொடர்ந்து தற்போது அடுத்ததாக பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பத்து தல திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கிரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளிதரன் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ஐந்து தேசிய விருதுகளை வாரி குவித்தது அதனை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்காரா சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படம் தேசிய விருதுகளை வாரி குவித்த அந்த நிலையில் இந்தப் படத்தில் அவருடைய உழைப்பை எந்த அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.