தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி வைத்த சிம்பு.! ஹீரோயின் யார் தெரியுமா

simbu
simbu

சினிமாவில் பொதுவாக ஆண் இயக்குனர்கள் பலர் சாதித்து வரும் நிலையில் அவர்களுக்கு இணையாகவே தற்போது உள்ள சினிமாவில் பெண் இயக்குனர்களும் தனது சாதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி தனது தனித்துவமான திரைப்படத்தின் மூலம் சாதித்த இயக்குனர் தான் சுதா கொங்கரா.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சன் பெற்றது. மேலும் இந்த திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளையும் பிலிம்பர் விருதுகளையும்  பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து மேலும் ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டம் தீட்டியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சிம்புவுடன் பிரபல நடிகை ஒருவர் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் அதாவது இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் சமீப காலங்களாக சரிவர திரைப்படங்களில் நடிக்காமல் தெலுங்கில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சிம்புவுடன் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடிக்க உள்ள இந்த படம் விரைவில் படபிடிப்பு தொடங்கும் என  கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த படம் குறித்து பட குழு விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.