மீண்டும் தனது ஆட்டத்தை ஆட தொடங்கிய சிம்பு – பயதில் இருக்கும் சினிமா இயக்குனர்கள்.?

simbu
simbu

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களில் கமிட்டாகி உள்ளார். அந்த வகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது சொல்லப்போனால் இன்னும் 25 நாட்கள் தான் இருக்கு இந்த படத்தின் ஷூட்டிங் முடிய.. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்

அதிலும் குறிப்பாக பத்து தல திரைப்படம்  மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.  இந்த படத்தில் சிம்புவின் நடிப்பை பார்க்க தற்போது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு பக்கம் சிறப்பாக கமிட்டாகி இருக்க மறுபக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சிம்பு திடீரென பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார்.

காரணம் இதுவரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் ஆனால் அடுத்த சினிமா பட வாய்ப்புகளை கையில் வைத்திருப்பதால் வேறு வழியில்லாமல் கவனம் செலுத்துவதில் இருந்து விலகி உள்ளார். அதன் காரணமாகவே நடிகர் சிம்பு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளார்.

இதற்காக மிகப் பெரிய ஒரு தொகையை சம்பளமாக  பெறுகிறார் நடிகர் சிம்பு. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு ஒரு கோடியை சம்பளமாக வாங்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது பத்து தல மற்றும் கொரோனா குமார் போன்ற படங்கள் கிடப்பில் கிடந்த விடுமோ என்ற எண்ணம் தற்போது இயக்குனர்களுக்கு வர தொடங்கியுள்ளது மீண்டும் தனது பழைய வேலையை காட்டத் தொடங்கிவிட்டாரோ எனக்கூறி ரசிகர்கள் பலரும் பதட்டத்தில் இருக்கின்றனர்.