தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரபல நடிகர்கள் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்துள்ள நடிகர்களைப் பார்த்தால் ஒரு விஷயம் கண்களுக்கு புலப்படும். அது என்னவென்றால் ஒரு நடிகர் தன்னுடைய போட்டியாளர் என்று மற்றொரு நடிகரை தனக்கு நிகராக நிறுத்தி வைத்திருப்பார்கள், அதாவது எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ், விக்ரம்-சூர்யா இவர்களைப் போல.
தனக்கு சமமான ஒரு நடிகரை தன்னுடைய போட்டியாளர் என ரசிகர்கள் மனதில் விதை போல் முளைத்து விடுகிறது, அதனால் அந்த நடிகரும் எந்த நடிகரும் எதிரி என ரசிகர்களின் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது, இது தான் பல நடிகர்களின் அசுர வளர்ச்சி என்றும் கூறலாம்.
அதேபோல் பெரிய ரசிகர் பட்டாளம் பெற்றிருக்காது நடிகர்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் அவர்கள் ஏன் இன்னும் உச்ச நடிகர்களாக வலம் வர முடியவில்லை என்பதற்கு காரணம் இதுதான், தனக்கு நிகரான நடிகரை போட்டியாக வைக்காதது தான் அவர்களின் இந்த நிலைமைக்கு காரணம்.
அந்தவகையில் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியவர்கள் பல விஷயங்களில் ஒருவருக்கு ஒருவர் போட்டி என்று தங்களுடைய ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்கள் அதனால் இந்த இரண்டு நடிகர்களும் எதிரி போல் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது.
அப்படியிருக்க நடிகர் சிம்பு சில காலங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசும் பொழுது தனுஷின் ஆரம்பகாலத்தில் நடித்த துள்ளுவதோ இளமை படத்தை பார்த்துவிட்டு இந்த திரைப்படம் நல்லாவே இல்லை என கூறினேன் என மேடையில் கூறினார் அதுமட்டுமில்லாமல் இன்று தனுஷ் இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணம் அவரின் அயராத உழைப்பு தான் என அந்த மேடையில் கூறினார்.