சிம்புவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் போட்டியா.? உண்மையை புட்டு புட்டு வைக்கும் பிரபலம்.!

simbu and sivakarthikeyan
simbu and sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் எப்பொழுதும் போட்டி போட்டு கொள்வது வழக்கம் அந்த வகையில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினி – கமல், அஜித் – விஜய் என போட்டிகள் நீண்டு கொண்டு தான் போகிறது இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறை போட்டிகளும் இருக்கும் என தெரியவருகிறது.

இந்த வகையில் அஜித் – விஜய்யை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மோதிக் கொள்ளாமல் ஒரு பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி  போன்ற நடிகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து சற்று முன்னேறி கொண்டே இருக்கிறார்.

அவருக்கு நிகராக விஜய் சேதுபதியும் ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தனது மார்க்கெட்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறார் இவர்கள் இப்படி இருக்க இது போன்ற வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். இப்படி இருந்தாலும் படங்களின் மூலம் ஓடிக்கொண்டே சில கருத்து வேறுபாடுகள் உருவாகும்.

கபடி சிம்புவுக்கும் சிவகார்த்திகேயன் இடையே பிரச்சனையை உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தன. இதற்கான முக்கிய காரணத்தை வலைப்பேச்சு அந்தனன் கூறி உள்ளார். டான் படத்தின் மொத்த வசூலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அதே நேரத்தில் டான் படத்திற்கு முன்பு வெளியான சிம்புவின் மாநாடு படத்தின் வசூலும் ஒரே சமயத்தில் வந்ததால் இதை பார்த்த ரசிகர்கள்  சிம்புவா..சிவகார்த்திகேயனா.. பேச ஆரம்பித்தனர்

உண்மையில் மாநாடு படத்தின் வசூல் முன்பே கேட்டு வந்தனர். கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால் டான் படத்தின் வசூலை வெளிவிடும் பொழுது மாநாடு படத்தின் வசூலையும் வெளியிட வேண்டியது ஆயிற்று எனக் கூறினார் மற்றபடி போட்டி எல்லாம் கிடையாது என தெரிவித்தார்.