என்னோட வழி இனி தனி வழி.. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு

simbu
simbu

தற்போது ஊடகங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் சிம்பு. ஏனென்றால் இவர் நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்த படத்தைக் காண சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அதற்கேற்றார் போல இந்த படமும் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டும் வருகின்றனர்.

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. அதில் சினிமா பிரபலங்கள் மற்றும் பத்துதல பட குழு போன்ற பலரும் கலந்து கொண்டு சிம்பு மற்றும் பத்து தல படத்தை பற்றி பேசி உள்ளனர்.

அந்த செய்திகள் பல சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகின. கடைசியாக சிம்பு நடித்து வந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்து சில தினங்களில் சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் பத்து தல திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் என்னுடைய தயாரிப்பில் நீ ஒரு படம் பண்ண வேண்டும் என சிம்புவுடன் கேட்டுக் கொண்டுள்ளார்

அதற்கு சிம்புவோ அதிக பட்ஜெட் படமாக இருந்தால் மட்டும் நான் நடிக்கிறேன் என பதில் அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே இனி நான் அதிக பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக கூறு இருக்கிறார் அதனை தொடர்ந்து தற்போது சிம்புவும் இப்படி கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் ஆகியுள்ளது. நடிகர் சிம்பு இனி நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்களாகவே அமையப் போகின்றன.