தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர்கள் என்றால் அது நயன்தாரா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தான் இவர்கள் இருவரும் வல்லவன் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த திரைப்படத்தின் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே தொட்டி ஜெயா என்ற திரைப்படத்தில் இதற்கு முன்பே நடிக்க இருந்தார்கள்.
ஆனால் சில பல காரணத்தின் மூலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க முடியாமல் போன நிலையில் கோபிகா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த இந்த வல்லவன் திரைப்படம் மனது மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டும் இல்லாமல் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
பின்னர் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் இவ்வாறு காதல் பிரிவிற்கு பிறகாக பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் கூட மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் இதுவரை பேசியதே கிடையாது அதன் பின்னர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் வலையில் விழுந்து விட்டார்.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் அதே நாளில் நடிகர் சிம்பு தன்னுடைய மாநாடு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வெளியிட்டது மட்டுமில்லாமல் அவர் அமர்ந்திருந்த இருக்கையின் நம்பரும் 9 மட்டுமின்றி வெளியிட்ட தேதியும் 18 ஆக இருக்கையில் அதனை கூட்டினால் ஒன்பது வருகிறது.
இவ்வாறு நடிகர் சிம்பு வேண்டுமென்றே இதேபோல தேதிகளை வாங்குகிறாரா இல்லை இயற்கையாகவே சிம்புவிற்கு இது போன்று நடக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.