Actor simbu releases video about vikram: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் ஒரு காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையை வெளிக்காட்டி நடிப்பதில் வல்லவர். இவர் படத்திற்கு ஏற்றாற்போல் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்வார்.இவர் நடிப்புக்கு உதாரணம் என்று கூட கூறலாம்.
ஒரே மாதிரியான கதை இல்லாமல் வேறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதில் சில படங்கள் இதோ சேது, காசி, ஜெமினி, தூள், சாமி, அந்நியன், பிதா மகன், பத்து என்றதுக்குள்ள, தெய்வத்திருமகள், ஐ, போன்றவையாகும்.
தற்போது இவர் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் 20 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மகாவீரர் கர்ணன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சியான் விக்ரமிற்கு நேற்று பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள்,பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறிவந்தனர். மேலும் அவரைப் பற்றிய சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஒரு சிறுவன் சிம்புவிடம் செல்ஃபி எடுக்க முயற்சி செய்கிறான் அந்த நேரத்தில் விக்ரம் சிறுவனை செல்பி எடுக்க விடாமல் விளையாட்டாக தடுக்கிறார். பின்பு அவரே கூப்பிட்டு செல்ஃபி எடுத்துக் கொடுக்கிறார். தற்போது அந்த வீடியோவை விக்ரமின் பிறந்தநாளையொட்டி சிம்பு வெளியிட்டுள்ளார். எனவே அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Simbu #actor pic.twitter.com/QfhLwTJJs2
— Tamil360Newz (@tamil360newz) April 18, 2020