மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படத்தைப் பற்றி அதிரடி அறிக்கையை வெளியிட்ட சிம்பு.!

vijay
vijay

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஜய் இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் வரும் பொங்கல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு 14 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது மிக முக்கியமாக இந்த படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானது திரையரங்குகளில் மீட்சிக்காக தான்.

திரை உலகமே முடங்கிவிட்டது ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும் திரையரங்குகளில திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்கான இந்த கொரோனா காலத்திலும்  வெகு பிரார்த்தனை பட்டு உயிரை பனையம் வைத்து நடித்து முடித்து தொழில் நுட்ப வேலைகள்,டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சி அல்ல.

இதற்காக மெனக்கெட்டு ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார் அது தன்னை உருவாக்கிய அந்த மீடியாவிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன் நாங்கள் திரையரங்குகளாள் உருவானவர்கள் மக்கள் எங்களை திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டும் என பொருத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும் கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வர தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள் விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும் கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தத்திலிருந்து வெளியாக வேண்டும் அதற்கு இந்த படங்கள் நிச்சயம் உதவும் உங்களை மகிழ்விக்கும்.

வினியோகஸ்தர்கள், திரையரங்குகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டும் வரவேண்டும்.

திரையுலகம் செழிக்க வேண்டும்.அதற்கான வாசலை மாஸ்டரும்,ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டு விட்டன.

திரையரங்குகள் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.

வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து திரையரங்க உரிமையாளர்களையும் சினிமா தொழிலாளர்களையும் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ் புத்தாண்டிற்குல் 100 சதவீத இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டாள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் பகிர்ந்த பதிவானது தற்பொழுது அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.