கையில் கன் செம்ம கெத்து..! மாசான புகைப்படத்துடன் வெந்து தணிந்தது காடு திரைப்பட அப்டேட்டை வெளியிட்ட சிம்பு..!

simbu-1
simbu-1

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததன் காரணமாக ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் தற்போது சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்களை சிம்பு கொடுத்துக் கொண்டே வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில்  என்ட்ரீ கொடுத்தது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் இதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில்  சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையை 15 கிலோ வரை குறைத்து நடித்துள்ளது தக்க விஷயமாக இருப்பது மட்டுமில்லாமல் சிம்புவை பார்த்து பலரும் பரிதாபப்படும் அளவிற்கு  உடல் எடையை குறைத்துள்ளார்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை பற்றிய மற்றொரு அப்டேட் களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் நடிகர் சிம்பு தன்னுடைய கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மிகவும் மாசாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு செம கெத்தாக உள்ளார் அந்த வகையில் சிம்பு வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.