சினிமா உலகில் சிலர் உண்மை சம்பவங்கள் மற்றும் நாவலை மையமாக வைத்து சில படங்களை எடுப்பது வழக்கம் அந்த வகையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க பல்வேறு நடிகர்களும் இயக்குனர்களும் ஆர்வம் காட்டினார் ஆனால் யாராலயுமே அந்த படத்தை எடுக்க முடியவில்லை ஒரு வழியாக மணிரத்னம் தான் பல்வேறு தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகிறது முதல் பாகம் தான் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராஜ், பிரபு, திரிஷா மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மணிரத்தினம் இப்பொழுது முயற்சிக்கவில்லை இதற்க்கு முன்பாக மூன்று தடவை முயற்சித்தாராம். ஆனால் அப்பொழுது சில காரணங்களால் அந்தப் படத்தை எடுக்க முடியாமல் போனது. ந்த படத்தின் கதையை உருவாக்கும் பொழுது இந்த படத்திற்காக ஒரு சில நடிகர் நடிகைகளை ஆசை ஆசையாக கமிட் செய்தார்
இந்த படத்தில் ஒன்னு ரெண்டு நடிகர் நடிக்க முடியாது குறைந்தது 30 கதாபாத்திரம் சிறப்பான கதாபாத்திரம் என்பதால் கிட்டத்தட்ட 30 நடிகர், நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க ஒவ்வொரு நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்தார். அந்த வகையில் நயன்தாரா சிம்பு போன்றவர்களையும் இந்த படத்தில் கமிட் ஆக்கினார். சிம்பு கமிட்டானதால் நயன்தாரா பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார்.
ஆனால் மறுபக்கம் சிம்பு இந்த படத்தில் நடனமாடுவது மற்றும் ஒரு சில விஷயங்கள் மற்ற நடிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் விக்ரம், ஜெயம் ரவி போன்றவர்கள் நாங்கள் இந்த படத்தில் நடிக்க மாட்டோம் என கூறியுள்ளனர் இதை எதிர்பார்க்காத இயக்குனர் சிம்புவுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்று தெரியவில்லை என கூறி புலம்ப ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில் நடிகர் சிம்பே வந்து இந்த படத்தில் இருந்து விலகிறேன் என கூறியுள்ளார் .