தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கான ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெற்று வரும் நிலையில் திரையரங்குகள் ஒதுக்கிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் தமிழக திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுமள்ளது.
எனவே அஜித், விஜய் இரண்டு பேரும் முன்னணி நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழகத்தில் தலா 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுஸ் இருந்து வருகிறது எனவே அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக திரையரங்கு ஒதுக்கீடு தர வேண்டும் எனவே இது குறித்து விரைவில் சென்னை சென்று உதயநிதியை சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாகவும் கூறியுள்ள நிலையில் இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கோபத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு இது ஒரு புறம் இருக்க வாரிசு திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் நடிகர் சிம்புவுக்கு போன் செய்து வாரிசு திரைப்படத்திற்காக ஒரு பாடல் பாடி தருமாறு கேட்டுள்ளார் அதற்கு சிம்புவும் தளபதி திரைப்படம் என்பதால் உடனே சரி என கூறிவிட்டு 1:30 மணி நேரத்தில் பாடல் பாடி தந்துள்ளார்.
பிறகு ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் தமன் போன் செய்து நீங்களே இந்த பாடலில் நடித்து கொடுத்தால் நல்லா இருக்கும் எனக் கூற பிறகு சிம்புவும் சரி எனக் கூறிவிட்டு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். பிறகு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டதற்கு சிம்பு சம்பளம் எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். இவ்வாறு இதன் காரணத்தினால் தான் நடிகர் சிம்பு வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.