நடிகர் சிம்பு கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது இதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பத்து தல கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.
மிகவும் பிஸியாக நடித்து வரும் சிம்பு ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பப்பட்ட வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என்ற ரியாலிட்டி ஷாவை தொகுத்து வழங்கி வந்தார் தற்பொழுது இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் சிம்பு தன்னுடைய படப்பிடிப்பு வேலைகளில் மிகவும் மும்முரமாக இறங்கி விட்டார். தற்பொழுது படப்பிடிப்பை தொடர்ந்து மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் சிம்பு ஆட்டோ டிரைவராக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் சிம்பு ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சிவப்பு நிற கைக்குட்டை உடன் செம ஸ்டைலாக கெத்தாக வலம் வருகிறார்.
இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் இந்த கெட்டப் கொரோனா குமார் திரைப்படத்தின் கெட்ட பாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் விளம்பரத்திற்காக இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். இப்படி பல்வேறு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் இது படத்திற்கான வீடியோ இல்லை எனவும் சிம்புவின் விளம்பரத்திற்காக எனவும் கூறப்படுகிறது பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அவருக்கு பிறகு சிம்புதான் இந்த கெட்டப்பில் செம மாஸாக இருக்கிறார் எனவும் இந்த வீடியோ அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.
Lastest viral ad shoot video of @SilambarasanTR_ #Atman #SilambarasanTR pic.twitter.com/vxVtAylJQW
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 11, 2022