நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் திரில்லர் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ள நிலையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஹீரோவாகவும், இயக்குனராகவும் கலக்கி வரும் கௌதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கி வரும் இத்திரைப்படத்தினை இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதற்காக 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களை வேண்டாம் என்று தவிர்த்த நடிகர்களின் லிஸ்டில் முதல் இடத்தைப் பிடிப்பவர் சிம்பு கதாநாயகிகளிடம் பல காதல் கிசுகிசுக்கள், அடுத்தடுத்த படங்கள் தோல்வி, படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, கதை சரியில்லை என படங்களை தவிர்ப்பது என ஏராளமான பிரச்சனைகளுக்கு பிறகு சமீபகாலமாகத் தான் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் மிகவும் குண்டாக இருந்து வந்த சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி இருக்கும் நிலையில் தனது இழந்த மார்க்கெட்டை உயர்த்திய அதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார். அந்தவகையில் ஒரு மாதத்திற்கு ஐந்து கோடி என இரண்டு மாதத்திற்கு 10 கோடியாக சம்பளத்தை பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது.