மிஸ்கினுடன் சிம்பு கைகோர்ப்பது உறுதியாகியுள்ளது.! தயரிப்பாளர் இவர் தான்.!

mysskin
mysskin

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காத நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படம் தடைப்பட்டிருந்தது தற்போது இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பரப்பாக தொடங்கப்பட்டது இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி. வளாகம் .திரையரங்குகள் போன்றவை அனைத்தும் மூடப்பட்டதால் தற்காலிகமாக படத்தின் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருக்க ஒர்க் அவுட் செய்து இருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவியது சமிபத்தில் சிம்பு அவர்கள் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவேன் என  பிறந்தநாளன்று ரசிகர் முன்பு கூறினார்.அதன் விளைவாக மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடதக்க இதற்கு முன்பு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு அவர்கள் மஃப்டி என்ற ரீமேக் படத்தில் நடித்து வந்தார் ஆனால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது இதனை தொடர்ந்து சிம்பு கால்ஷீட் அடுத்த படத்திற்கு பயன்படுத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தற்பொழுது எதிரி உள்ளது.