சிம்பு வச்சி படம் எடுக்கிறது..! லேசுப்பட்ட காரியம் கிடையாது.? இளம் இயக்குனர்களுக்கு டிப்ஸ் கொடுத்த கே. எஸ். ரவிக்குமார்.!

simbu
simbu

நடிகர் சிம்பு அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன இதனால் சிம்புவின் மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது மேலும் சிம்புவை வைத்து படம் பண்ண தற்பொழுது இயக்குனர்கள் ரொம்ப ஆசைப்படுகின்றனர் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு இயக்குனரும் சிம்புவை வைத்து படம் பண்ண விரும்பவில்லை.

அதற்கு காரணம் நடிகர் சிம்பு படத்தின் கதையை எல்லாம் கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிடுவார் ஷூட்டிங் என வந்துவிட்டால் டெக்னீசியன் தொடங்கி இயக்குனர் வரை அனைவரும் ரெடியாக இருப்பார்கள் ஆனால் சிம்பு தனது இஷ்டத்துக்கு எப்ப தோணுகிறதோ அப்பொழுதுதான் வருவாராம் அதுவும் ஒரு சில தடவை ஷூட்டிங் இருக்கு  வரவேமாட்டாராம்.

சொல்லவும் மாட்டாராம் இதனால் சூட்டிங் கேன்சல் ஆகிவிடும். ஒரு கட்டத்தில் படமே டிராப் ஆகிவிடுமாம். ஒரு சில படம் தொடங்கப்படாது ஒரு சில படம் முடிவே அடையாமல் பல வருடங்கள் இழுத்து கிடைக்குமாம். என்ன இப்ப கூட ஒரு சில இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் பண்ண பயந்து கொண்டுதான் இருக்கின்றனர் ஏனென்றால் சிம்புவை எப்பொழுதுமே நம்ப முடியாது.

திடீரென காலை விரித்து விட்டால் அவ்வளவுதான் எனக்கூறி பயந்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார். நான் சிம்புவை வைத்து சரவணா என்னும் படத்தை எடுத்தேன் இந்தப் படத்தின் சூட்டிங் போது சிம்பு தாமதமாகத்தான் வருவார் நாங்கள் எல்லாம் காலையிலேயே ஷூட்டிங் எடுப்பதற்கான வேலைகளை செய்து வைத்துக் கொண்டு சிம்புவுக்காக காத்துக் கொண்டே இருப்போம்.

ஆனால் அவரோ சரியான நேரத்திற்கு வர மாட்டார் இதனால் ஒரு இடத்தில் நான் கடுப்பாகி இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என கூறினேன் சிம்பு பயந்து என்ன காரணம் எனக் கேட்டார் ரவிக்குமார் உடனே சிம்புவை பார்த்து உனக்கு எப்பொழுது சூட்டிங் வர முடியுமோ அப்பொழுது சொன்னால் அதற்கு ஏற்ற நேரத்தில் வருவோம். முடியாது என்றால் சொல்லிவிடு வேறு காட்சிகள் எடுப்போம் உன் இஷ்டத்துக்கு வருவது படத்தோட வெற்றிக்கு நல்லது இல்லை என கூற.. அதிலிருந்து சிம்பு சரியான நேரத்திற்கு வந்து விடுவார்.

சிம்புவை எல்லோரும் குறை கூற கூடாது அதற்க்கு ஏற்றார் போல நம்மளும் சரியாக நடந்து கொண்டால் நல்லது என கூறினார்.