விஷால் நாமம் போட்டுட்டு போவாராம் ஆனா தண்டனைய சிம்பு அனுபவிக்கணுமா..?

simbu-vishaal-2
simbu-vishaal-2

தமிழ் சினிமாவில் சமீபத்தில் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகர் சிம்பு.  தற்போது எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று அயராத போராடி வருகிறார் அந்த வகையில் இவர் சில வருடங்களுக்கு முன்பாக நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் ஓரளவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மைக்கேல் என்பவர் தான் இயக்கியிருந்தார். மேலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்காக இவர் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்தார் இதன் காரணமாக சிம்பு மூன்றரை கோடி தன்னுடைய சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்த ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படம் திரையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இத்திரைப்படத்தை ஐசரி கணேசன் என்பவர் தான் தயாரித்து வருகிறார் ஆனால் இத்திரைப்படம் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர்கள் தயாரானபோது பெப்ஸி ரெக்கார்டு கொடுத்துள்ளது

அந்தவகையில் சிம்புவின் திரைப்படத்திற்கு பெப்சி ஊழியர்கள் யாருமே பணியாற்றக் கூடாது என்று கூறியது மட்டுமில்லாமல் அந்த தயாரிப்பாளர் சங்கத்திடம் ஐசரி கணேசன் என்ன விளக்கம் சொன்னாலும் அதை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கிடையாதாம்.

இதனால் சிம்புவின் தாயாரும் தந்தையாரும் ஒரு  பதிவினை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.  அந்த வகையில் இவர்கள் கூறியது என்னவென்றால் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது ஏழு கோடி பணத்தை மோசடி செய்ததாக கூறப்பட்டது.

simbu vishaal-1
simbu vishaal-1

இவ்வாறு விஷால் மீது இவ்வளவு குற்றசாட்டு இருக்கும் பொழுது அவர் கூறிய அந்த அறிக்கையை ஏற்று சிம்புவை எதிர்ப்பது  மிகவும் தவறான செயல் அதுமட்டுமில்லாமல் மேல்முறையீடு செய்வது எல்லா வழக்குகளுக்கும் பொருத்தமானது என்றும் டி ராஜேந்திரன் அவர்கள் கூறியுள்ளார்.