Simbu missed movie : நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்து படத்தில் நடித்து வருகிறார் குழந்தை பருவத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆனால் இதற்கு முன்பு சிம்பு நடித்த திரைப்படங்கள் சில சர்ச்சைகளை சந்தித்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில் சிம்பு பல திரைப்படங்களை தவறவிட்டு உள்ளார் அதேபோல் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தருண் கோபி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் திமிரு இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது சிம்பு தான் ஆனால் சில காரணங்களால் சிம்புவால் நடிக்க முடியாமல் போனது.
விஷால் திமிரு திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது, இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து ஸ்ரேயா ரெட்டி, ரீமாசென், வடிவேலு, விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் விநாயகம் அதன் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வில்லன் நடிகர் என்ற பெயரை எடுத்து விட்டார்.