சிம்பு மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்று அவர் லெவலெ வேறு.!

simbu
simbu

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர், சர்ச்சைக்கு பெயர் போன கோலிவுட் நடிகர் என்றால் அது சிம்பு தான், ஆனால் சிம்புவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் ரசிகர்கள் தான். சிம்புவின் ரசிகர்கள் சிம்புவை எப்பொழுதும் கைவிடுவதில்லை.

இதுதான் சிம்புவிற்கு மிகப்பெரிய பிளஸ், சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிம்பு தற்பொழுது எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் இதேபோல் முன்பு இருந்திருந்தால் பல பட வாய்ப்புகளை தட்டு தூக்கி இருப்பார்.

இந்த நிலையில் சிம்பு மிஸ் செய்த ஒரு படத்தைப் பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது, 2011-ம் ஆண்டு வெளியாகிய கோ திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் சிம்புதான் ஏனென்றால் கேவி ஆனந்த் முதலில் கதையை சிம்புவிடம் தான் கூறினாராம்.

சிம்பு ஏதோ ஒரு காரணம் கூறி அந்த திரைப்படத்தை தட்டி கழித்துள்ளார், இதனால் தான் அந்த கதை ஜீவாவிடம் சென்றுள்ளது, ஜீவா அந்த திரைப்படத்தில் நடித்தது ஜீவாவின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது.