எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு.. எல்லாமே வேணும்னு அலையறதும் தப்பு.. ஆனால் பறக்கும் சிம்புவின் 10 வசனங்கள்.!

simbu mass punch dialogue
simbu mass punch dialogue

simbu mass punch dialogue  : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் என்னதான் நீண்ட காலம் நடித்து வந்தாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாகியவர். சிறு வயதில் இருந்தே நடித்து வந்திருந்தாலும் இந்நேரத்துக்கு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்க வேண்டும் ஆனால் சிம்புவின் கட்டம் சரியில்லை அதனால்தான் இன்னும் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

அதேபோல் சிம்புவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் சமீப காலமாக அனைத்து சர்ச்சைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார்.

முதன் முறையாக தமிழில் “A” சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா.?

தற்பொழுது சிம்பு தன்னுடைய நாற்பத்தி எட்டாவது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாகி வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சிம்பு பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் தன்னுடைய பஞ்ச் வசனத்தின் மூலம் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் அந்த வகையில் சிம்பு பேசிய 10 மாஸ் வசனங்களை இங்கே காணலாம்.

மன்மதன் : வாழ்க்கையில யார் ஃபர்ஸ்ட் முன்னாடி போறாங்கன்னு முக்கியம் இல்லை, லாஸ்ட்ல யார் ஃபர்ஸ்ட் வராங்கறது தான் முக்கியம்.

வல்லவன்: கண்டிப்பா நான் திரும்ப லவ் பண்ணுவேன். உன்னை விட சூப்பரா, அழகா, நச்சுன்னு, கும்முன்னு, ஜம்முன்னு, ஒரு பொண்ண நான் தேடி போக மாட்டேன் அந்த ஆண்டவனே பார்த்து கொடுப்பான் என பஞ்சு வசனம் பேசி இருப்பார் சிம்பு.

சிலம்பாட்டம்:; விரல் ஆற்றவன் இல்ல விரலை விட்டு ஆட்டுவேன் என்ற வசனத்தை சிம்பு அந்த திரைப்படத்தில் பேசி உள்ளார்.

வானம்: என்ன வாழ்க்கையடா இது.

கலை கட்டிய ரோபோ சங்கர் வீடு.. இந்திராஜாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது வைரலாகும் புகைப்படங்கள்..

சைமா விருதுகள் : எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு எல்லாமே வேணும்னு அலையரதும் தப்பு.

விண்ணைத்தாண்டி வருவாயா: இந்த உலகத்துல எவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெசிய லவ் பண்ணுனேன்.

ஈஸ்வரன்: வாழ்க்கையை அனுபவிக்கணும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமே இருக்காது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: காதலிச்ச பொண்ண கூட விட்டுக்கொடுப்பேன் ஆனா உயிருக்கு உயிரான நண்பனை எப்பவும் விடமாட்டேன்.

இது நம்ம ஆளு: பசங்க மனச கடவுள் தயாரிச்சிருக்காரு பொண்ணுங்க மனச சீனாக்காரன் தயரிச்சிருக்கான்.

ஒஸ்தி: நான் கண்ணாடி மாதிரி நீ மொறச்சா முறைப்பேன் நீ சிரிச்சா சிரிப்பேன்.. என சிம்பு பேசிய பத்து வசனங்கள் இவைகள் தான்.