நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வந்து கொண்டிருக்கிறார் மேலும் நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக பத்து தலை திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு 39 வயது ஆகிவிட்டது திருமணம் எப்போது செய்து கொள்வார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. அது மட்டுமல்லாமல் சிம்பு திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவி வந்துள்ளது.
தற்போது கூட நடிகர் சிம்பு அவர்கள் சென்னையில் ஒரு வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் அந்த வீட்டை கட்டி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
ஆம் நடிகர் சிம்புவிற்கு மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிம்புவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தில் முழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் தாயார் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் இந்த திருமணத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.இதே வேகத்தில் சென்றால் நடிகர் சிம்பு அவர்கலுக்கு விரைவில் திருமணம் முடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடிகர் சிம்பு தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க உள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பத்து தல இந்த படத்தை ஒரு சில ஆண்டுகளாகவே படம் எடுக்க உள்ளதாக கூறி வந்த நிலையில் தற்போது பத்து தல படத்தின் பணிகள் விறு விருப்பாக நடந்து வருகிறது.