சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய திருமணம்..! மேடையில் சபதம் போட்ட பிரபல நடிகர்..!

simbu-11

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெய் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்தில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நமது நடிகர் அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்தவகையில் சென்னை 6000028, சரோஜா, வாமனன், கோவா, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, வாலு போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் திருவிழா சென்னையில் நடைபெற்றன.

இவ்வாறு இந்த விழாவில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளார்  அப்பொழுது அவர் நான் தளபதி விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளேன் அதன்பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க எனக்கு ஆசை தான் ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.

அதுமட்டுமில்லாமல் விஜய் நீ தான் ஹீரோ ஆகிவிட்டாய் அதற்கு அப்புறம் ஏன் என்று அவர் கேட்டுள்ளார். மேலும் திருமணம் எப்போது என ஜெய்யிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பதிலளித்த நடிகர் ஜெய் சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய திருமணம்.

என்று கூறியது மட்டுமல்லாமல் கண்டிப்பாக அடுத்த வருடம் சிம்புவுக்கு திருமணம் நடந்து விடும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

jai-1
jai-1