சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் இணைந்த இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகர்.! வைரலாகும் புதிய புகைப்படம் இதோ.!

simbu-latest-new-look
simbu-latest-new-look

சிம்பு தற்பொழுது உடல் எடை குறைத்ததால் அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.

முதலில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

மேலும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தில் சிம்புவோடு ஒரு பிரபலம் இணைந்துள்ளார் அந்த பிரபலம் யார் என்றால் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்ற டேனியல் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

நான் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளேன் என்று காட்டுவதற்காக டேனியல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.