நான் காதலித்தது நயன்தாராவை மட்டுமல்ல…! முதன்முறையாக தனது காதல் பிரேக் அப் பற்றி பேசிய சிம்பு.

simbu-nayanthara
simbu-nayanthara

சினிமாவில் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் மற்றும் நடிகைகளுக்கு காதல் மலர்வது இயல்பான காரியம், அந்த காதல் நீண்ட காலமாக நிலைப்பதில்லை சிறிது காலத்திலேயே பிரிந்து விடுவார்கள் இது ஒன்னும் சினிமாவில் புதிதல்ல.

அப்படி பல சினிமா பிரபலங்கள் காதலித்து பிரிந்து உள்ளதை நாம் அதிகமாக பார்த்துள்ளோம், அந்த வகையில் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் நடிகைகளில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாராவும் ஒரு ஜோடி.

இவர்கள் இருவரும் வல்லவன் திரைப்படத்தில் நடித்த பொழுது காதலிக்க தொடங்கினார்கள், ஆனால் இவர்கள் காதல் நிலைக்க வில்லை சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

அப்படி இருக்கும் வரையில் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய காதல் முறிவு பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நடிகர் சிம்பு கூறியதாவது நாங்கள் இருவரும் காதலித்தது உண்மைதான் ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து விட்டோம் தற்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கூறியதாவது நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை பல பேரை காதலித்து இருக்கிறேன் நயன்தாராவுடன் காதல் முறிவுக்கு பிறகு இருவரும் இணைந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த இருந்தது குறிப்பிடத்தக்கது.