பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த சிம்பு – நயன்தாரா செய்த தந்திரமான வேலை..

nayanthara and simbu
nayanthara and simbu

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு கனவு படம் அதை எடுக்க பல தடவை அவர் முயற்சித்தாலும் ஒரு வழியாக இப்பொழுது தான் அது நிறைவேறி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கிறார். முதல் பாகத்தை ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளிவர இருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

படம்  வெளிவருவதற்கு  முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர் மற்றும் டீசர் போன்றவற்றை வெளியிட்டு அசத்தி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

ponniyin selvan
ponniyin selvan

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  முதலில்  நடிகர் சிம்பு நடித்திருந்தார் என கூறப்படுகிறது. அதேபோல நந்தினி கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும் சொல்லப்படுகிறது சிம்பு இந்த படத்தில் நடித்ததால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.

இதனால் சிம்பு இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் கடைசி நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என கூறப்படுகிறது. இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்ட தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.