தடுக்கி விழுந்த சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு ஆறுதல் கூறும் சிம்பு.!

simbu-sivakarthikeyan
simbu-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சிவகர்த்திகேயன் மற்றும் சிம்பு. சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து தற்போது சிம்பு அவர்கள் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடிகர் சிம்புவின் கேட்டாப் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது பிரிண்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவும் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் சில பத்திரிகையாளர்கள்  இவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

ஆனால் அதற்கு நாங்கள் எல்லாம் சலித்தவர்கள் கிடையாது என்று இருவரும் விட்டுக் கொடுக்காமல் தற்போதும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பல விஷயங்களை கூறியுள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் தற்போது சிவகார்த்திகேயன் இருக்கிறார் அவர் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அவர் டிவி ஷோக்களில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் நுழைந்தார்.

அவர் டிவி ஷோவின் போது எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் டிவி ஷோக்கலில் பல நடிகர்களை கலாய்த்து பேசியுள்ளார் அதில் நடிகர் சிம்புவும் இருந்தார் அதை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர் இதுகுறித்து சிம்புவே சில வருடங்களுக்கு முன்பு பேசி உள்ளார்.

சிவகார்த்திகேயன் தனது விடா முயற்சியால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவருடைய சினிமா வெற்றியில் எனக்கு மிகவும் சந்தோசம் தான் நானே போன் செய்து பாராட்டி இருக்கிறேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் என பேசி உள்ளார் நடிகர் சிம்பு. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.