தாதா கெட்டப்பில் சிம்பு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைக்கும் வேற லெவல் மாஸ் லுக்.! தலைவன் வேற ரகம் என கூறும் ரசிகர்கள்…

simbu
simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் இடைப்பட்ட காலத்தில் இவர் மீது பல இயக்குனர் தயாரிப்பாளர் என புகார் வைத்தார்கள் ஆனால் அதை அனைத்தையும் தவிடுபொடியாக்கி தற்பொழுது தான் உண்டு தன் படத்தில் நடிப்பது உண்டு என தனது வேலையை மட்டும் பார்த்து வருகிறார். இதற்கு முன்பு இருந்த சிம்புவா என பலரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் படி  சிம்பு நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாகவே தாய்லாந்தில் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார் அவரது லேட்டஸ்ட் லுக் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். சிம்பு தற்பொழுது 10 தலை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

simbu
simbu

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது இதற்காக தான் சிம்பு தாய்லாந்தில் இருந்து பறந்து சென்னை வந்துள்ளார். தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாகவே சிம்பு தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்  அதற்கு காரணம் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் வேற லெவலில் இருக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

மேலும் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய சிம்புவின் மாஸ் லுக் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான் ஏனென்றால் பழைய சிம்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சிம்பு உடல் எடை அதிகரித்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார் இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாஸாக இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

simbu
simbu

இந்த நிலையில் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்கு தற்பொழுது எஸ் டி ஆர் 48 என டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது விரைவில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதற்காக சிம்பு மற்றும் கமலஹாசன் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.