தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய ஒரு தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு.. இவர் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார் அப்படி தளபதி விஜய் வைத்து 2005 ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது கூட இவர் பெரிய பட்ஜெட்டில் பல படங்களை தயாரித்து வருகிறார் கடைசியாக கூட தனுஷின் “நானே வருவேன்” படத்தை இவர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு அவர்கள் சச்சின் திரைப்படம் குறித்து ஒரு சுவாரசிய பின்னணியை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் சொன்னது முதலில் இயக்குனர் துரை “தொட்டி ஜெயா” திரைப்படத்தின் கதையை விஜயிடம் கூறினாராம் ஆனால் அந்த கதையின இரண்டாம் பாகத்தை கொஞ்சம் மாற்றி அமைக்குமாறு விஜய் கூறியிருந்தார் இயக்குனர் துரை அதற்கும் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார் ஆனால் பணிகள் முடிவடைய மிகவும் தாமதமானதாம்.
இதனைத் தொடர்ந்து கலைப்புலி எஸ். தாணு இயக்குனர் ஜான் மகேந்திரனை அழைத்து விஜய் இடம் கதை சொல்ல வைத்திருக்கிறார். இப்படி உருவான திரைப்படம் தான் சச்சின் அதன் பிறகு இயக்குனர் துரை தொட்டி ஜெயா திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்கினார் .
இந்த திரைப்படத்தையும் கலைபுலி எஸ் தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்காது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி எல்லாம் நடந்திருக்கா விஜய்க்கு வந்த கதையில் நடிகர் சிம்பு சூப்பராக நடித்து இருந்தார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.