அஜித்தை ஓரம் தள்ளி வைக்கும் சிம்பு.. இந்தப் படத்துக்கு அப்புறம் தான் எல்லாமே மாறிப்போச்சு

Simbu
Simbu

Simbu : திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோவும் மிகப்பெரிய ஒரு ஹீரோ ரோல் மாடலாக இருப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது இளம் நடிகர்களுக்கு பலருக்கும் ரஜினி, கமல் தான் மிகப்பெரிய ரோல் மாடலாக இருந்து வருகின்றனர் அவர்களுக்கு அடுத்து அஜித், விஜய் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கின்றனர்.

அப்படிதான் சிம்பு சினிமாவிற்கு வந்த புதிதில் நான் ரஜினி ரசிகன் என்று கூறினார். அதனாலயே என்னையோ லிட்டில் சூப்பர் ஸ்டார் என வென்று எல்லாம் பெயர் வைத்துக்கொண்டார் இப்படி ஓடிக் கொண்டிருந்த சிம்பு திடீரென அஜித் ரசிகர் என்று கூறி வந்தார் அஜித் படம் வெளியாகும் போது வாழ்த்து கூறுவார்.

பல போட்டிகளில் பல மேடைகளில் தனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் என ஓப்பனாக பேசியும் வந்தார். திடீரென அஜித் ரசிகனாக இப்பொழுது காட்டிக் கொள்வதே இல்லை இது குறித்து வலைப்பேச்சு அந்த அண்ணன் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. சிம்பு பலமுறை நான் ஒரு அஜித் ரசிகர் என்று கூறி வந்தார்.

அதற்கு அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வந்ததில்லை ஒருமுறை அஜித் படம் வெளியான சமயத்தில் அவரிடம் அது குறித்த கேள்வி கேட்ட பொழுது நான் சொல்லித்தான் அவரின் படம் வெற்றி பெற வேண்டும் என்று அவசியம் இல்லை என நல்ல விதமாக கூறினார் ஆனால் ரசிகர்கள் அதை தவறாக புரிந்து கொண்டனர் சமூக வலைதள பக்கங்களில் கடுமையாக திட்டினார்.

அதோடு வாலு படம் வெளியாகாமல் பிரச்சனை ஏற்பட்ட போது விஜய் சிம்புவை தொடர்பு கொண்டு ஏதேனும் உதவி வேண்டுமா என்று ஆறுதல் கூறினார் அப்பொழுதிலிருந்து சிம்பு தன்னை அஜித் ரசிகராக காட்டிக் கொள்வதில்லை ஒருவேளை அந்த சம்பவத்திலிருந்து அவரின் மனம் மாறியே இருக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.