நடிகர் சிம்பு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்ததன் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர்.
இப்படி பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சிம்பு ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவின. பின்பு சிம்பு ஜிம் ஒர்க் அவுட் செய்து உடலை பிட்டாக வைத்துக் கொண்டு ஈஸ்வரன், மாநாடு போன்ற திரைப்படங்களை கொடுத்தார் இந்த படம் அவருக்கு கம் பேக் திரைப்படமாக அமைந்தது.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல என்னும் படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளனர். மேலும் கொரோனா குமார் என்னும் படத்திலும் சிம்பு கமிட் ஆகினார் ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து சிம்பு விலகி உள்ளதாக பல தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ஒரு தரமான கூட்டணியில் இணை உள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு அடுத்து நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கே ஜி எஃப், சலார் போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது