தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் கடைசியாக கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் மற்றும் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இவர்களை தொடர்ந்து நெப்போலியன்,யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் கடந்த வருடமே முழுவதுமாக பட வேலைகள் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனையினால் ரிலீசாகாமல் இருந்து வந்தது.
பிறகு திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் படம் பார்க்கலாம் என்று அனுமதிக்கப்பட்ட நிலையில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனார் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனதால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் பின்தங்கியது.
இதனைத்தொடர்ந்து OTT-யில் ரிலீசாகும் என்று கூறிவந்தார்கள். ஆனால் தற்போது திரையரங்குகளில் ரிலீசாக ரெடியாக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து விவேக் மெர்வின் இசையில் அனிருத்,ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு என்ற பாடல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்திக்காக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு பாடி உள்ள யாரையும் இவ்வளவு அழகா பார்த்தது இல்ல என்ற பாடல் இன்று ஏழு மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் தற்போது அப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்.