ஆண்டவருடன் கைகோர்த்த சிம்பு..! மக்களை கவர இது என்ன புது ரூட்டா..?

simbu-kamal
simbu-kamal

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சுமார் 380 கோடிக்கு மேல் வசூல் செய்த மிக பெரிய சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது கமலில் ரேஞ்ச் மாறியது மட்டுமில்லாமல் மிகப் பெரிய உயரத்துக்கு சென்று விட்டார் அந்த வகையில் இனிமேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் மிக பிரமாண்டமாக முடிவடைந்த நிலையில் 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது இந்நிலையில் அந்த ஐந்து சீசன் களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் பொதுவாக கமல் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் அவற்றை உன்னிப்பாக கவனிப்பார்கள்.

அந்த வகையில் பிரபல ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் விக்ரம் திரைப்படத்தால் கமல்ஹாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக விஜய் டிவியில் வெளியாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க  மறுத்தார் ஆகையால் அந்த நிகழ்ச்சியை லிட்டில் சூப்பர் ஸ்டார்  சிம்பு இயக்க வேண்டி ஆயிற்று.

அதுமட்டுமில்லாமல் அவரும் கமலுக்கு நிகராக தான் அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் 6வது சீசனை கமல் தொகுத்து வழங்குவார் அல்லது சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் சிம்பு மற்றும் கமல் ஆகிய இருவருமே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலமாக பல்வேறு இளம் நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளார் அந்த வரிசையில் தற்போது சிம்புவும் சேர்ந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தொடர்ந்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள் என கூறப்படுகிறது.