லிங்குசாமியின் திரைப்படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர்களில் ஒருவர் லிங்குசாமி அவர்கள் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இவர் தயாரிப்பில் வெளியாகிய தீபாவளி, பட்டாளம், பையா, வழக்கு எண் 18/9, கும்கி, இவன் வேற மாதிரி, அஞ்சான் இடம் பொருள் ஏவல், உத்தமவில்லன், ரஜினிமுருகன் என பல திரைப்படங்கள் அடங்கும்.
மேலும் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய ரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து ஜீ, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேன் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்திற்கு ‘தி வாரியர்’ என பெயர் வைத்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.
சிம்பு பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால்தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சிம்பு பாடியுள்ளார் அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இந்த பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிம்பு பாடியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேன், ஆதி, கீர்த்தி ஷெட்டி அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடிங் கிங்ஸ்லே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.