IPL – லை கொண்டாட காத்து இருக்கும் சிம்பு.! எந்த அணிக்கு சப்போர்ட் செய்ய போகிறார் தெரியுமா.? அவர் அணிந்து இருக்கும் ஜெர்சி இந்த டீம்மா..

simbu
simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் மாறிக்கொண்டே சென்றதால் நடிகர் சிம்பு சினிமாவில் எடுத்த உடனேயே தனது திறமையை வெளி காட்டினாலும் சினிமாவில் அவரால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் இவரால் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாக முடியவில்லை அதோடு மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் சரியான நேரத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மேல் இருந்து வருகிறது. மேலும் சில காதல் விஷயங்களில் சிக்கி சின்னாபின்னமானதால்  இவர் ஒரு சில வருடங்கள் சினிமாவில் காணாமல் போய் இருந்தார்.

இதிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொள்ள தனது எண்ணங்களையும் உடல் எடையையும் முழுவதுமாக குறித்து தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார் அதன் விளைவாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை கொடுத்து மக்களுக்கு விருந்து கொடுத்தார் அதனை அடுத்து மாநாடு என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

வெற்றியை நோக்கி ஓட ரெடியாக இருக்கும் சிம்பு பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கின்றன. மேலும் உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு செம சூப்பராக இருக்கிறார். தற்போது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவை நம்பி  படவாய்ப்புகள் அள்ளி கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது அதாவது சிஎஸ்கே அணியின் ஜெர்சி போட்டுக்கொண்டு செம போஸ் கொடுத்த காட்சி தற்போது இணையதளத்தில் பேசும்பொருளாக இருந்து வருகிறது. இதோ அழகில் ஜொலிக்கும் சிம்புவின் புகைப்படம்.

simbu
simbu