மிரட்டலான சைக்கோ மற்றும் திரில்லர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிம்பு.! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்

simbu
simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் அந்த திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்பு மாநாடு திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்து விடலாம் என பரபரப்பாக நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு சிம்பு தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னை இப்படி மனுஷன் ஒல்லி ஆகி விட்டார் என ஆச்சரியப்பட்டார்கள்.

ஈஸ்வரன் திரைப் படத்தை முடித்த பிறகு மீண்டும் சிம்பு  மாநாடு திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் , இந்த நிலையில் கமலஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த சிவப்பு ரோஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தினை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா தான் இயக்க இருக்கிறார் என்றும் சிம்பு அல்லது தமன் இசையமைக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜா இருவரும் முடிவு செய்து வெளியிடுவார்கள் என பாரதிராஜாவின் மகன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.