மேல தாளத்துடன் பிரம்மாண்ட இடத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போகும் சிம்பு..! சிறப்பு விருந்தினராக யார் யார் வராங்கன்னு தெரியுமா..?

simbu-audio
simbu-audio

தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான பொழுது பல்வேறு காதல் திரைப்படத்தில் நடித்து ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகர்களையும் சரிசமமாக கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சில பல பிரச்சனையின் காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு திரைப்படத்தின் மூலமாக தனது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து திரைப்படம் எடுக்க ஆசைப்படுவது மட்டுமில்லாமல்  கால் சீட் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள்.

நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெந்து தந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா  ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

பொதுவாக இந்த திரைப்படம் ஆனது கடந்த வருடம் செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது ஆனால் இந்த திரைப்படம் இந்த ஆண்டு 15ஆம் தேதி திரையில் வர இருக்கிறது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

simbu-011
simbu-011

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வரும் ரஜினி கமல் ஆகிய இருவரும் கலந்து கொள்வது மட்டுமில்லாமல் ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.