தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் சிம்பு இவர் மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் முதலாவதாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் நடிகர் சிம்பு பத்து தல படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கலையரசன், திஜே அருணாச்சலம், joe malloori, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது சிம்பு இப்பொழுது எல்லாம் ஷூட்டிங்க்கு சரியாக வருகிறார் நல்ல ஒத்துழைப்பு படக்குழுவிற்கு கொடுக்கிறார் என புகழாரம் சூட்டினார் மேலும் அவரிடம் சில கேள்விகளும் கேட்கப்பட்டது.
அண்மையில் பத்துதல படத்தில் ஒரு காட்சியில் சிம்பு சட்டையை கழட்டி விட்டு வருமாறு சொன்னதற்கு சிம்பு உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுமஸ்தான உடம்புடன் வருகிறேன் என்று படபிடிப்பு தளத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்று சொல்கிறார்களே அது உண்மையா என இயக்குனரிடம் கேட்டுள்ளனர். இயக்குனர் சொன்னது அது எல்லாம் பொய் அப்படி எல்லாம் இல்லை கர்நாடகாவில் ஷூட்டிங் செய்தோம் அங்கு மழை காரணமாக சூட்டிங் தொடர முடியவில்லை.
விரைவில் மதுரை நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறும் என கூறினாராம். ஆனால் எது உண்மை என்பது சரியாக தெரியவில்லை. நடிகர் சிம்பு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் அந்த செய்தி உண்மை அல்லது புகைப்படம் வெளியிடும்பொழுது இந்த உண்மை தெரிந்து விடும் என சினிமா வாசிகள் கூறுகின்றனர்.