நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படமானது வெகு நாள் படப்பிடிப்பில் இருந்தது மட்டுமில்லாமல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த திரைப்படமாகும்.
அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியிடும் தேதி வெளியிட்ட பிறகும் அன்று வெளியாகுமா என ரசிகர்களை பதட்டம் அடைய செய்து பின்னர் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது. இவரின் திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு திரை உலகில் மிகவும் பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவ்வகையில் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை மிகவும் மோசமாக குறைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு பார்ப்பதற்கு வெறும் 14 வயது சிறுவன் போல தோற்றமளிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல மும்பையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளதாக கௌதம் மேனன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க உள்ளதாகவும் அவருக்கு இந்த திரைப்படத்தில் பாவை என்ற கேரக்டர் கொடுக்கப்பட்டதாகவும் கவுதம் மேனன் கூறியுள்ளார்.
இந்நிலையில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நமது இயக்குனர்.