தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் நடிகர் சிம்பு இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேர்ப்பை பெற்றது.
கிட்டத்தட்ட தொடர் வெற்றிகளை கொடுத்த நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அதன் பிறகு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி கட்ட படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்களை உள்ளது அதனைத் தொடர்ந்து கொக்கி குமார் என்ற திரைப்படத்திலும் நடிகர் சிம்பு அவர்கள் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாக உள்ளது என ரசிகர்கள் பல தரப்பிலிருந்து கேள்விகளை எழுப்பி உள்ளனர் இந்த நிலையில் விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த பாடகர் என்பதும் நமக்கு தெரிந்த ஒன்றுதான். இவர் தனது படங்களிலும் சரி மற்றவர்கள் படங்களிலும் சரி வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் பாடி வருகிறார் அப்படி தனது நெருங்கிய நண்பரான மகத் நடிக்கும் பாலிவுட் படமான டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்த பாடலின் மூலம் நடிகர் சிம்பு அவர்கள் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த பாடலை தனது ட்விட்டர் பாகத்தில் நடிகர் சிம்பு அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சிம்பு அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் அதாவது எனது நண்பர் மகத் அவர்களுக்காக பாலிவுட் திரையில் நான் அறிமுகமாகி ஒரு பாடலை பாடியுள்ளேன் அந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த பட குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த பாடல்.