ஹன்சிகாவை கட்டி அணைத்திருக்கும் சிம்பு.! வெளியான புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்.

hansika simbu
hansika simbu

நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் வாலு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது, இதைப் பற்றி இருவரிடம் கேட்டபொழுது இருவரும் மறுக்காத நிலையில் சமூக வலைத்தளத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது.

இதற்கு முன் சிம்பு, நயன்தாராவை காதலித்த போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானதால், சிம்பு, நயன்தாரா காதல் பிரிவில் முடிவடைந்தது என கூறப்படுகிறது, அதேபோல் ஹன்சிகா, சிம்பு காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சினிமாவில் சின்சியராக நடக்கலாம் என முடிவெடுத்த பின்பு ஹன்சிகா கேட்டு விட்டாரே என மஹா  படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க முடிவெடுத்துவிட்டார். அதேபோல் மஹா திரைப்படத்தில் ஹன்சிகா மீது சிம்பு ஹாயாக படுத்து குட்டித் தூக்கம் போடுவது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் செம வைரலானது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு மஹா திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார், அந்த திரைப்படத்தில் செம ஸ்டைலிஷாக பைலட் கெட்டப்பில் நடித்து மிரட்டினார். புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறாக லைக் குவித்து வருகிறது.

simbu
simbu

அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கின் பொழுது ஹன்சிகா மற்றும் சிம்பு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது, அப்பொழுது சிம்பு ஹன்சிகாவை இருக்கமாக அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது,.

இந்த புகைப்படத்தை பார்த்து இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து விட்டார்கள் என சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இது மஹா திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என சிலர் கூறுகிறார்கள். எது எப்படியோ ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.

simbu
simbu