வெள்ளித் திரையில் உச்ச நட்சத்திரமாக வளர வேண்டும் என்ற கனவுடன் பல நடிகர் நடிகைகள் கால் தடம் பதிக்கின்றனர். பிரபலங்கள் என்னதான் திறமையை வெளிப்படுத்தினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி சின்னத்திரை பக்கம் பயணிக்கின்றனர் .
அந்த வகையில் பப்லு என்கின்ற பிரித்திவிராஜ் தமிழ் சினிமா உலகில் அவள் வருவாளா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளி காட்டி அசத்தி இருந்தாலும் இப்பொழுது பெரிய அளவில் பட வாய்ப்புகள் வெள்ளித்திரையில் கிடைக்காததால் சின்னத்திரை பக்கத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்.
பிருதிவிராஜ் என்கின்ற பப்லு சினிமா துறையில் தான் சந்தித்த அனுபவங்களை பேட்டியில் பகிர்வது வழக்கம். அப்படி அஜித்தை பற்றி இவர் ஏற்கனவே பேசிய செய்தி இணையதள பக்கத்தில் தீயாய் பரவிய நிலையில் தற்போது நடிகர் சிம்பு குறித்தும் அவர் பேட்டி ஒன்று பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது :
சிம்பு உடல் எடையைக் குறைத்தது மிகவும் வியப்பாக இருக்கிறது. அதற்கு அவரை முதலில் நான் பாராட்டுகிறேன். அதேசமயம் உடல் எடையை குறைத்த பிறகு அதை சரியாக மெயின்டனன்ஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள் பலமுறை அவருக்கு அட்வைஸ் கொடுத்து உள்ளேன்.
மேலும் பேசிய அவர் சிம்புவை நான் தூக்கி வளர்த்த பிள்ளை நான் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்ன சற்று வாய் தான் கொஞ்சம் அதிகம் என சிரித்தபடி கூறினார் நடிகர் பிரித்திவிராஜ்.