தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் டி ராஜேந்திரன் அவர்களுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக சிம்பு அமெரிக்காவில் தனது தந்தையுடன் சிகிச்சைக்காக சென்று விட்டார்.
ஆனால் சமீபத்தில் வீடு திரும்பிய நமது நடிகர் தற்பொழுது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது தான் நடித்த இந்த திரைப்படத்தின் அனைத்து வேலைகளையும் மிக விறுவிறுப்பாக முடித்துக் கொடுத்த சிம்பு அவர்கள் தன்னுடைய திரைப்படத்தை முழுவதுமாக பார்த்துள்ளாராம்.
இவ்வாறு அந்த திரைப்படத்தை பார்த்தவுடன் அவருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் துள்ளி குதித்து விட்டார் என்று பலர் கூறிய நிலையில் திரைப்படம் அவ்வளவு அற்புதமாக வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு சந்தோஷம் தாங்க முடியாமல் இயக்குனர் கௌதமேனனை நடிகர் சிம்பு கட்டி பிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இது போன்ற திரைப்படங்களை எடுக்க உங்களால் மட்டும் தான் முடியும் என வார்த்தைக்கு வார்த்தை அவரை பாராட்டி உள்ளது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்திருப்பார்கள். மேலும் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது மட்டும் இன்றி வெற்றி திரைப்படமாக அமைந்தது.
அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள வெந்து தந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.