தமிழ் படங்களை விமர்சிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சிம்பு – இசை வெளியீட்டு விழாவில் காரசார பேச்சு.!

சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் எல்லாம் அந்தந்த மொழியில் அந்தந்த நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றி / தோல்வி அடைவது வழக்கம் ஆனால் இப்பொழுது அதிக லாபத்தை பெற தனது  சொந்த மொழியையும் தாண்டியே பான் இந்தியா என்ற பெயரில் தனது படத்தை மற்ற மொழிகளில் பரப்புகின்றனர்.

அப்படி அண்மை காலமாக பிறமொழி படங்கள் மற்ற பக்கங்களிலும் வெளிவந்து நல்ல வசூல் வேட்டை நடத்துகின்றனர்.  அந்த வகையில் தெலுங்கு படங்களான பாகுபலி, பாகுபலி 2 அதனைத் தொடர்ந்து அண்மையில் வெளிவந்த ராஜமௌலியின் புதிய படமான RRR, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்.

அடித்ததோடு பிரமாண்ட வசூலையும் அள்ளி சாதனை படைத்தது ஆனால் அண்மை காலமாக தமிழ் படங்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை டாப் நடிகர்கள் படங்கள் செய்ய  வில்லை இதனால் தமிழ் சினிமாவை தவறாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது இதில்  சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராக நடிகர் சிம்பு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

அப்போது பேசிய அவர் இங்கு எல்லோரும் பான் இந்தியா பான் இந்தியா என பேசிக் கொண்டு வருகின்றனர். கமல் சாரோட மருதநாயகம் படத்தின் ஐந்து நிமிட காட்சியை எடுத்து விடுங்க அது போதும் இவங்க எல்லாம் என பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார் நடிகர் சிம்பு.

Leave a Comment